Home

Ministry of Public Security

118 Online Emergency Complaint System

ஒன்லைன் ஊடாக அவசர மற்றும் முறைப்பாடை தாக்கல் செய்யவும்.

இந்த இணையதளம் மூலம் தாக்கல் செய்யப்படும் முறைப்பாடுகள், செயன்முறைப்படுத்தப்பட்டு சாத்தியமான விசாரணைக்காக உள்ளூர் அல்லது சர்வதேச சட்ட அமுலாக்க அல்லது ஒழுங்குமுறைப்படுத்தல் முகவரகங்களுக்கு பரிந்துரைக்கப்படலாம். இந்த இணையதளத்தில் தாக்கல்செய்யப்பட்ட எந்தவொரு முறைப்பாடு மீதும் ஆரம்பிக்கப்படும் எந்தவொரு விசாரணையும் சட்ட அமுலாக்க மற்றும் / அல்லது முறைப்பாடு தொடர்பான தகவலைப் பெறும் ஒழுங்குமுறை முகமையின் தற்றுணிபின் பேரில் முன்னெடுக்கப்படும்.

Check Status of a complaint

118 ஓன்லைன் (நேரலை) அவசர முறைப்பாடு மற்றும் பொதுமக்கள் முறைப்பாட்டு முகாமைக் கட்டமைப்பு தாபிப்பு

118 தேசிய சேவைப் பணியகத்தின் முதன்மை நோக்கம் தேசிய பாதுகாப்பு தொடர்பில் பொது மக்களுக்குத் தெரிந்த தகவல்களை துரிதமாக பாதுகாப்புச் செயலாளர் பெற்றுக் கொள்வதற்கு ஏற்பாடு செய்தலாகும். இது தவிர, ஆயுதப்படைகள், காவல்துறை மற்றும் அனைத்து அரச நிறுவனங்களுக்கும் எதிரான குற்றச்சாட்டுகள் மற்றும் கருத்துகளுக்களை முன்வைப்பதற்கான நிலையமொன்றாகவும் செயற்படும்.

தற்போது, 118 தேசிய சேவை நிலையம் புதிய தொழில்நுட்பத்துடன் இணைந்து, 24 மணித்தியாலம் பூராக Online Emergency & Public Complain Management System ஒன்றாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளரின் நேரடி மேற்பார்வையின் கீழ் அமைச்சு வளாகத்தில் இயங்கி வருகிறது.

இந்த 118 நிலையம் மூலம்,

  • காவல்துறை மற்றும் அரசு நிறுவனங்களின் அதிகாரிகளினால் மேற்கொள்ளப்படும் துர் நடத்தைகள் தொடர்பாக
  • பொதுமக்களின் பொது மற்றும் சமகால பிரச்சினைகள் தொடர்பாக
  • பொதுமக்கள் அமைதியை மீறுகின்றமை தொடர்பாக
  • கொலைகள், திருட்டுகள், கொள்ளைகள், பெண்களுக்கு எதிரான வன்முறைகள், பாதாள உலக நடவடிக்கைகள், மோதல்கள், சச்சரவுகள், முதியோர் துஷ்பிரயோகம் மற்றும் ஊழல் புலனாய்வுகள் தொடர்பாக
  • பொதுமக்களின் தீர்க்கப்படாத பிரச்சினைகள் தொடர்பாக

பொதுமக்கள் இந்த இணையதளத்திற்குப் பிரவேசிப்பதன் மூலம் 118 நிலையத்தை தொடர்புகொண்டு துரிதமாக அறிவிப்பதற்கான இயலுமை காணப்படுகின்றது.